பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í S4 கண்ணன் பாட்டுத்திறன் ஈடுபட்டு வியந்து பாடுகின்றார். பாடல், நாயகன் வாக்காக அமைந்துள்ளது. சுட்டும் விழிச் சுடர்தான்-கண்ணம்மா! சூரிய சந்திரரோ? வட்டக் கரியவிழி-கண்ணம்மா! வானக் கருமை கொல்லோ? பட்டுக் கருநீலப்-புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில்-தெரியும் நட்சத்திரங்க ளடி: மேலும் பேசுகின்றார் : "உனது கந்தரப் புன்முறுவல் சோலை மலரொளிபோல் தோன்றுகின்றது; உன் நெஞ்சில் எழும் ஆலைகள் நீலக்கடல் ஆலைகள்போல் காட்சி அளிக்கின்றன. உன் குரலின் இனிமை குயிலின் இனிய ஓசையை ஒத்துள்ளது. உனது யெளவன எழில் கட்டித்தழுவ என்னைத் தூண்டுகின்றது." பல்வரிசைக்கு முல்லை முகையை கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம்; இது வடிவ உருக்காட்சி. ஆனால் இதனை மாற்றி வண்ண உருக்காட்சியாகக் காட்டுவது மிக அற்புதம், சோலை மலரொளியோ-உனது சுந்தரப் புன்னகைதான்! அவள் சிரிப்பு மின்சாரச் சிறு கை விளக்கொளிபோல் (Torch light) தோன்றுகின்றது போலும்! இறுதிப் பாடற்பகுதி இப் பாட்டின் முத்தாய்ப்பு போல் அமைந்துவிடுன்றது. சாத்திரம் பேசுகிறாய்,-கண்ணம்மா! சாத்திர மேதுக் கடி! ஆத்திரம் கொண்டவர்க்கே,-கண்ணம்மா! சாத்திர முண்டோ டி!