பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 கண்ணன் பாட்டுத்திறன் அந்த ஆளைத் தீண்டுவதால் அறிந்து கொள்ளுகின்றார், மொர மொர' என்று பட்டாடை உரசும் ஒலியும் உடலில் பூசியுள்ள மணப் பொருளின் வாசனையும் வந்தது ஆள் என்பதை உணர்த்திவிடுகின்றன. அந்த ஆள் கைப்பட்ட தால் கவிஞரிடம் உவகையூற்றுத் தோன்றுகின்றது. வந்த ஆளை இனம் கண்டுவிடுகின்றார். வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா! மாய மெவரிடத்தில்?’ என்று பேசுகின்றார். அவள் சிரிக்கின்றாள், அந்தச் சிரிப் பொலியில் அவள் பொத்திய கைகளை விலக்கித் தழுவி என்ன செய்தி சொல் என்று வினவுகின்றார். அவள் அடுக்கடுக்காக அன்பு குழைந்த வினாக் கணைகளைத் தொடுக்கின்றாள்: 'நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்? நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்? திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்? சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்? பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே பெற்ற நலங்கள்என்ன? பேசுதி' என்றாள். இங்ங்ணம் கண்ணம்மாவின் வினாக்கணைகட்குக் கவிஞர் காட்டும் கேடயம் : 'நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்; நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன்; திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன்; சின்னக் குமிழிகளில் நின்முகம் கண்டேன்; பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை; சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே திருமித் தழுவியதில் நின்முகம் கண்டேன்.'