பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிவழிக் கண்ணன் 馨 வழக்கு காலப்போக்கில் தென்னாட்டிலும் பரவி வழங்கியது. இதற்குச் சங்க இலக்கியங்கள் பலவும் சான்று ப் க வன வா கு ம். பலதேவனைப்பற்றித் தொல் காப்பியனார் கூற, அவருக்கு வாய்ப்பு நேரவில்லை. எனினும், நம்பி மூத்தபிரானைப் போற்றும் முறையும் இருந்ததென்பதற்குத் தொல்காப்பியத்தில் ஒரே ஒரு குறிப்பினைக் காணலாம். தொல்காப்பிய எழுத்ததி காரத்தில் பனை என்ற சொல்லுக்குமுன் வரும் சொற்கள் புனரும் முறையை, கொடிமுன் வரினே ஐ அவண் நிற்பக் கடிநிலை இன்றே வல்லெழுத்து மிகுதி." என்ற விதி விளக்கும். அதாவது, பனை என்பதற்கு முன் கொடி என்பது வருமொழியாக வருங்கால் ஏனை யவைபோல ஐகாரம் கெட்டு அம்முச் சாரியை பெறாது ஐ நிற்ப வல்லெழுத்துப் பெற்றுப் புணரும் என்ாதாகும். பனை-கொடி=பனங்கொடி என்று வராது; பனை + கொடி=பனைக்கொடி என்றே வரும். இங்ங்ணம் தொல் காப்பியரி பனைக்கொடியைத் தனியாக எடுத்துக்கொண்டு விதி கூறுவதனால் அக்கொடி அக்காலத்து வழக்கு மிகுதி பெற்றிருந்தது என்பதை அறியலாம். இங்கனம் வழக்கு மிகுதிபெற்ற பனைக்கொடி கலதேவர்க்கு மட்டிலுமே உரியது. இதனால் சங்கர்ஷண வாகதேவர்கள் வடபுலத்தைப் போலவே தமிழகத்தும் தொன்றுதொட்டு வழிபடப்பெற்று வந்த அவதார மூர்த்திகள் என்பது தெளிவாகும். இங்ங்ணம் தமிழ் மக்களின் ஆதி தெய்வங்களுள் ஒருவரான கண்ணன், தாமே தனித்தும் நம்பி மூத்தபிரா 8. தொல். எழுத்து. உயிர்மயங்கியல்-83