பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் காதலி 互67 இவ்வாறு ஒவ்வொரு கணைக்கும் ஈடு கொடுக்கின்றார், இதில், 'பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை’ 'திருமித் தழுவியதில் நின்முகம் கண்டேன்’ என்ற அடிகளில் கவிதையின் அனல்’ தெறிக்கின்றது. நாம் சிருங்காரத்தின் கொடுமுடி”யை எட்டிவிடுகின்றோம். சிருங்காரத்தை அறிய முடியாதவர்களும் இப்பாடலில் சிருங்கார ரசத்தை இனங் கண்டு கொள்ள முடியும். மூன்றாம் பாடல் : ரஜபுத்திரப் பெண்களும் முகமதியப் பெண்களும் முக்காடிட்டு முகத்தை மறைத்துக்கொள்ளும் வழக்கத்தைக் காண்கின்றோம். இந்தப் பழக்கத்தைப் பற்றி இப்பாடல் குறிப்பிடுகின்றது. கவிஞரின் காதலி கண்ணம்மா முகத்திரையுடன் காணப்பெறுகின்றாள். அவளை நோக்கிக் கவிஞர் பேசுகின்றார் : தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி!-பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்; வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும்-இந்த மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்: வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும்-துணி மறைத்தத னாலழகு மறைந்ததில்லை; சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை-முகச் சோதி மறைந்துமொரு காதலிங் குண்டோ? இந்தியப் பெண்கள் அழகாக ஆடை யுடுத்தி மார்பகங் களை மூடி மறைத்துக்கொண்டிருப்பதே ஒரு தனி எழில். இப் பழக்கம் மகளிரின் அடக்கப் பண்பிற்கும் நாணத் திற்கும் ஓர் அறிகுறி. இங்ங்ணம் இடையையும் மார்பகத் தையும் மூடுவதால் மகளிரின் அழகு மறைந்து 0ோவ தில்லை என்பது கவிஞரின் கருத்து. உண்மையும்