பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கண்ணன் பாட்டு த்திறன் அதுதானே. உயிரினங்கள்-பயிரினங்கள் கூட-மன்மதக் கலை"யை நன்கு அறிந்துள்ளன. இனவிருத்தியும் இக் கலையின் அடிப்படையில்தானே அமைந்துள்ளது? 'முகதரிசனம்"தான் ஒரு பெண்ணின் தோற்றத்திற்கு உயிர் நாடி.காக உள்ளது. பொதுவாக மேனியழகு ஒரு மகளுக் குக் கவர்ச்சி தருவதாக இருப்பினும், அவளது முகவெட்டு தான் ஓர் ஆடவனை அதிகமாகக் கவருகின்றது. இதனால் தான் பாஸ்போர்ட் அளவு ஒளிப்படத்தைக் கொண்டே ஒர் ஆடவன் தன் பாதி இசைவினைத் தருகின்றான்: மகளும் அப்படியே. இருவரும் ஒரளவு ஒப்புதல் தெரிவித்த பின்னரே நேரில் காணும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அப்போதும் முகச்சோதி'யை முக்காடிட்டு மறைத்தால் யாது பயன்? சோதி-முகச்சோதி-மறைத்துமொரு காதவிங் குண்டோ? என்பது இளங்காதலர்குக் கவிஞர் விடும் சவால்! திரையை இட்டு முகத்தை மறைக்கும் கழக்கம் ஆரிய முன்னெறிகள் என்று கண்ணம்மா கூறுவதாகக் கருதும் கவிஞர், - ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய்-பண்டை ஆசியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ? என்று வினவுகின்றார். இதுபற்றிய விளக்கத்தைத் திருப்பதியில் என்னுடன் பணிவாற்றின. இந்தி நண்பர் ஒருவரைக் கேட்டேன். அவர் தந்த விளக்கம்: வட புலத்தில் ரஜபுத்திரர்கட்கும் முகம்மதியர்கட்கும் பிறவியி லிருந்தே காழ்ப்பு. இவர்கள் ஆட்சி புரியுங்கால் ஒரு சாரா ரின் இளம்பெண்களை மற்ருெரு சாரார் தூக்கிக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது. முக அழகுதான் இத்தக் கவர்ச்சியை உண்டாக்குவதற்குக் காரணம் என்று சொல்லுவதில் இருவேறு கருத்திற்கு இடம் இல்லை. இதனால் வடநாட்டுப் பெண்கள் அனைவரிடமும் முகம்