பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் காதலி 葱台9 மூடி போடும் வழக்கம் இருந்து வருகின்றது. மேலும் அவர் இரு சாராரும் வீடு கட்டுவதில் வாயில்களை நேரி நேராக வைப்பதில்லை; வெளியிலிருந்து வீட்டினுள் நடமாடும் இள நங்கையர்களைப் பிறர் பாராமலிருப் பதற்கே இந்த ஏற்பாடு என்றார். இருசாரார் ஆட்சியிலும் உளவாளிகளை வைத்து இளம்பெண்கள் இருப்பதை நோட்டம் பார்த்து அப்படி யிருப்பதைத் தெரிந்து, வலிந்து கவர்ந்து செல்வார்கள் என்ற பழக்கத்தையும் தெரிவித்தார். பாரதியார் கருத்துப்படி பண்டை ஆரிய மகளிரிடம் முகத்திரை யிடும் பழக்கம் இல்லாதிருக்கலாம். இன்றைய வடநாட்டுப் பெண்கள் அனைவரிடமும் இவ் வழக்கம் இருந்து வருவதற்கு என் இந்தி நண்பர் கூறிய காரணம் பொருத்தமாகவே அமைகின்றது. பாரதியாருக்கு முகத்திரையிடும் பழக்கம் ஒர் ஒவ்வாமை (Alfregy) போல் தோன்றுகின்றது. கண்ணம் மாவிடம் நன்கு பழகியவர் பாரதி. பராசக்தியையே குழந்தையாகக் கண்டு மகிழ்ந்தவரல்லவா? இப்படி நீண்ட நாள் பழகியதற்குப் பிறகு ஒப்புக்கு முகத்தை மூடி நாணத் தைக் காட்டுவதில் பொருள் இல்லை. அதனால்தான், ஒரிரு முறைகண்டு பழகியபின்-வெறும் ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடி? என்று கேட்கின்றனர். பண்டைய நெறிப்படி ஆச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெண்களிடம் பிறவிப் பண்பு 8. நாண் - பெண்டிற்கு இயல்பாக உள்ளதொரு தன்மை: மடம்.கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை; அச்சம் - பெண்மையின் தான் காணப்படாததோர் பொருள் கண்ட விடத்து அஞ்சுவது; பயிர்ப்பு - பயிலாத பொருட்கண் அரு வருத்து நிற்கும் நிலைமை. இது நக்கீரர் தரும் விளக்கம் (இறை. கள. 2-உரைகாண்க).