பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 கண்ணன் பாட்டுத்திறன் களாக அமைந்தவை. இன்றும் சிலரிடம், மார்பகத்தை நன்கு மூடி வைத்திருப்பினும், ஒர் ஆடவரைக் காணும் போது மார்பகத்தை மேலும் மூடுவதுபோல், கை செயற் படுவதைக் காணலாம். அங்ங்ணமே, நன்கு பழகிய வட நாட்டார் வீட்டில் நாம் இருக்கும்போது முகத்திரை இடாது காணப்படும் பெண்கள் வேறு ஒர் வட நரட்டார் (ஆடவர்) வருங்கால் சரேலென்று முகத்திரை இட்டுக் கொள்வதைக் காணலாம். இச்செயல்கள் எதனைக் காட்டு கின்றன? இவை மகளிரிடம் இயல்பாகவுள்ள நாணத்தைக் காட்டுகின்றன. இதற்குமேல் ஒன்றும் கூறுவதற்கில்லை. ஒப்புக்கு இவ்வாறு செய்கின்றனர் என்றும் சொல்லுவதற் கில்லை, பாரதியாருக்குக் கண்ணம்மாவைத் தொட்டுப் பார்க்க வேண்டும்-நொப்புல அநுபவம் பெறவேண்டும்-என்ற எண்ணம் உதிக்கின்றது. அவர் கூறுகின்றார்: யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார்-வலு வாக முகத்திரையை அகற்றி விட்டால்? காரிய மில்லையடி வீண்ப சப்பிலே-கணி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பனோ? இறுதியடி கவிஞரின் காமத் துடிப்பினைக் காட்டுகின்றது. ஆத்திரம் கொண்டவர்க்கே-கண்ணம்மா சாத்திர முண்டோ டீ! என்று முன்னர் சொன்னவரல்லவா? இதிதுடிப்பெல்லாம் நம் மனத்தில் எழும் காமத்துடிப்பு போன்றதன்று. இது தெய்விகக் காதல். இக் காதல், நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி!-கண்ணம்மா!