பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் காதலி I 7 : தன்னையே சசியென்று சரண மெய்தினேன்.9 என்ற இசைப்பாடற் பகுதியில் அரணாக அமைந்து இக் கருத்தினை மேலும் உறுதி செய்கின்றது. விஷய காமம்’ பகவத்விஷய காமமாகப் பரிணமித்துத் திகழ்வதை இங்குக் காணலாம். கான்காம் பாடல் : இப்பாடலில் கவிஞர் சிவான்மாவுக் கும் பரமான்மாவுக்குமுள்ள வழிவழித் தொடர்ப்ைபிறவிதோறும் தொடர்ந்து வரும் உறவினை-எடுத்துக் காட்டுகின்றார். எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்! உனக்கேநாம் ஆட்செய்வோம்." என்ற ஆண்டாளின் கருத்தினையொட்டி இஃது அமைந் திருப்பதாகக் கருதலாம். சித்தோபாயமாக இருப்பவன் எம்பெருமான். அவன் இப்பொழுது பாரதியாருக்குக் கண்ணம்மாவாக இருக் கின்றான். முகத்திரையைக் களைந்திடுமாறு கேட்டவர் அவளுடைய காதற்குறிப்பை அறிந்தே அவள் துகிலினை -முகமூடியை-தானே நீக்கி விடுகின்றார். கண்ணம்மா நாணிக் கண்புதைக்கின்றாள். உடனே கவிஞர் கேட் கின்றார் : 9. தோ. பா. 53-கண்ணம்மாவின் நினைப்பு 10. திருப்.-29 11. நாணிக்கண் புதைத்தல்-என்ற ஒரே துறையில் அமைந்த அமிர்தகவிராயரின் ஒரு துறைக் கோவை நினை விற்கு வருகின்றது.