பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#73 கண்ணன் பாட்டுத்திறன் மன்னர் குலத்தினிடைப் பிறந்ததவளை-இவன் மருவ நிகழ்ந்த தென்று நாண முற்றதோ? சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ?-இங்கு செய்யத் தகாத செய்கை செய்தவருண்டோ? சின்னஞ்சிறுவயதிலிந்து கவிஞர் சக்தி வழிபாடுடையவர். சக்திதான் கவிஞருக்குக் கலைமகளாகவும், திருமகளாக பராசக்தியாகவும் காட்சி தருகின்றாள். கண்ணம்மாவும் இவளே. சிறு பிராயத்தில் கலைமகளிடம் காதல் கொண்டதை, பிள்ளைப் பிராயத்திலே-அவள் பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு பள்ளிப் படிப்பினிலே-மதி பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட வெள்ளை மலரணைமேல்-அவள் வீணையுங் கையும் விரிந்த முகமலர் விள்ளும் பொருளமுதும்-கண்டுடன் வெள்ளை மனது பறிகொடுத்தேன், அம்மா!' என்ற பாடலில் காணலாம். ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இப் பாடலிலும் (நான்காம் பாடல்) இதனை வலியுறுத் தில் பேசுகின்றார் : 'கண்ணம்மா, கன்னிவயதிலுன்னைக் கண்டவனன்றோ? கன்னஞ் சிவக்க முத்தமிட்டேனே, நினைவு இல்லையா? நம்மை நாம் அன்னியமாக ஒரு போதும் நினைத்ததில்லையே, நம் உறவு ஈருடல் ஒருயிரன்றோ? பன்னிப் பன்னிப் பேகவதால் பயன் என்ன? துகில் பறித்தவனுக்குக் கைபறிக்க அச்சம் எழா தன்றோ? என்னைப் புறமெனவும் கருதுவதோ? கண்கள் இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள் குமோ?’’ 18. தோ. பா.-64. மூன்று காதல்-1