பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் காதலி 17.3 நம் நாட்டில் ஆண்கள் பெண்களை அடக்கிவைப்ப தற்கு எத்தனையோ பொய்க் கதைகளைப்-சுவை நைத்தி பழங்கதைகளைப்-புனைந்து வைத்துள்ளனர். அவற்றை யெல்லாம் தாம் கண்ணம்மாவுக்குச் சொல்ல வேண்டுமா? என்கின்றார். ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்ற கொள்கையையுடையவர் நம் கவிஞர் பெருமான். ஆதலால்தான், பாட்டும் சுதியு மொன்று கலந்திடுங்கால்-நம்முள் பன்னி உபசரணை பேசுவ துண்டோ? நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே-விண்ணை நின்று புகழ்ந்து விட்டுப் பின் மருவுமோ? மூட்டும் விறகிணையச் சோதி கவ்வுங்கால்-அவை முன்னுப சாரவகை மொழிந்திடு மோ? என்று வினவுகின்றார். சீவான்மாவும் பரமான்மாவும் பாட்டும் கதியும்போலவும், நிலவுக்கதிகளும் விண்வெளி யும்போலவும், விறகும் தீயும் போலவும் உறவுகொண் டிருப்பதாகத் தெரிவிக்கின்றார். இந்த உறவு இன்று நேற்று ஏற்பட்டதன்று. இந்த உலகம் தோன் றிய நாள்தொட்டு ஏற்பட்டதாகும். சாத்திரங்கள் யாவும் இதையே உரத்த குரலில் எடுத் தோதுகின்றன. கவிஞர் கூறுகின்றா? : நேற்று முன்னாளில் வந்த உறவன்றடி!-மிக நெடும்பண்டைச் காலமுதற் சேர்ந்துவந்ததாம். போற்றுமி ராமனென முன்புதித்தனை-அங்கு பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்; -ஊற்றமு தென்னஒரு வேய்ங்குழல் கொண்டோன் --கண்ணன் உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான். இவை மட்டுமா?