பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 74 கண்ணன் பாட்டுத்திறன் முன்னை மிகப்பழமை இரணியனாம்-எந்தை மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ; பின்னையோர் புத்தனென நான்வளர்ந் திட்டேன் -ஒளிப் பெண்மை அசோதரையென் றுன்னை எய்தினேன். என்று மேலும் உறவு காட்டுவார். ஒரு காலத்தில் இராமன் சீதை போலவும் (நாயக நாயகி உறவு), இன்னொரு காலத்தில் கண்ணனும் பார்த்தனும் போலவும் (தோழர்கள் உறவு) மற்றொரு காலத்தில் நரசிங்கனும் பிரகலாதனும் (இறைவன்-மனிதன் உறவு) போலவும், பிறிதொருகாலத்தில் புத்தன்-அசோதரை போலவும் (சேய்-தாய் உறவு) இருந்து வந்ததைப் புலப்படுத்துவார். பரமான்மா நிலையில் இராமன், கண்ணன், நரசிங்கன், புத்தன் இருப்பதையும் சீதை, பார்த்தன், பிரகலாதன், அசோதரை இவர்கள் சீவான்மா நிலையில் இருப்பதையும் 'கண்ணன் பாட்டு என்ற கவிதையின் தத்துவத்தையே எடுத்துக்காட்டிவிடுகின்றார். இந்த உறவுபற்றிச் சாத்திரங் கள் கூறுவதில் தவறு இல்லை; வல்லார் வரைந்து வைத்த ஏடுகள் இவை. இந்த உறவு எதிர்காலத்திலும் தொடர்ந்து செல்வதை, இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்;-இதில் ஏதுக்கு நாணமுற்றுக் கண்பு தைப்பதே? என்ற அடிகளில் உறுதிப்படுத்துகின்றார். நிலைமை இப்படியிருக்க கண்ணம்மா தன்னைக் கண்டு நாணிக் கோணவேண்டியதில்லை: கண்புதைக்கவும் வேண்டிய தில்லை. பகிரங்கமான உறவு என்று நிலைநாட்டுகின்றார் இப்பாடலில். இங்கு அடங்கிய சிருங்காரத்தைக் காண் கின்றோம்.