பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் காதலி 互7教 ஐந்தாம் பாடல் : இந்தப் பாடலில் குறியிடந் தவறியது என்ற அகத்துறையின் விளக்கத்தைக் காண முடிகின்றது. இத்துறை அல்ல குறிப்படுதல்,' என்ற அகத்துறையுடன் ஒரு புடை ஒத்துள்ளது என்று கூறலாம். கண்ணம்மா தோழியுடன் தான் வருவதாகக் குறியமைக் கின்றாள். குறியிடம்-தீர்த்தக்கரையில் தெற்கு மூலையி லுள்ள செண்பகத் தோட்டம்;--காலம் : வெண்ணிலவு காயும் இரவு. (தியானத்திற்கும் தகுந்த இடம்:). கவிஞர் ஆந்த இடத்திற்கு வந்து கண்ணம்மாவைக் காணாமல் தவிக்கின்றார். அந்த ஏக்கத்தில் பாடல் பிறக் கின்றது. வார்த்தை தவறிவிட்டாய்-அடிகண்ணம்மா! மார்பு துடிக்குதடி! பார்த்த விடத்தி லெல்லாம்-உன்னைப்போலவே பாவை தெரியு தடி! என்று பகருகின்றார். நோக்கிய எல்லாம் அவைபோல் கானல் நிலை ஏற்படுகின்றது. எங்கும் கண்னம்மாவின் உருவம் தென்படுகின்றது. யாதுமாகி நின்றாய்-காளி:எங்கும் நீ நிறைந்தாய்" என்று கூறியவரல்லவா? காரிகை மீதுள்ள காதல் கடவுள் காதலாக மாறிவிடுகின்றது என்று கூட இதனைக் கருதலாம், கண்ணம்மாவைக் காணாமல் கவிஞர் எங்ங்ணம் ஏங்கு கின்றார்? அவரே கூறுகின்றார் : 14. அல்ல குறிப்படுதல்-குறியல்லாத குறியில் மயங்கு தல். இதன் விளக்கத்தை அகத்திணைக் கொள்கைகள்' என்ற நூல் (பக். 94-97) காண்க. 15. தோ. பா.-30 காளிப்பாட்டு: 31. காளிதோத் திரம்-அடி 1