பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 கண்ணன் பாட்டுத்திறன் மேனி கொதிக்கு தடி!-தலைசுற்றியே வேதனை செய்கு தடி: வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்! மோனத் திருக்கு தடி இந்தவையகம் மூழ்கித் துயிலினிலே, நானொருவன் மட்டிலும்-பிரிவென்பதோர் நரகத் துழலு வதோ? வையகமெல்லாம் உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும்போது தான் மட்டிலும் துயிலின்றித் தவிக்கும் நிலையைப் புலப்படுத்துகின்றார். தலை சுற்றிய வேதனையில், மேனி கொதிக்கும் நிலையில், தாம் துன்பப்படுவதை, எடுத்து மொழிகின்றார். கவிஞரின் காதல், கடவுட் காதல்; தெய்விகக் காதல், கவிஞர் தலைவன் நிலையிலிருந்துதான் தலைவியைக் காணத் துடிக்கின்றார். தலைவி இருக்குமிடம் காவல் மிகுதியுடையது என்று கூறுகின்றார். காவல் இல்லாத நேரமே இல்லை என்பதையும் புலப்படுத்துகின்றார். கடுமை யுடைய தடி!-எந்த நேரமும் காவலுன் மாளிகையில்: கொடுமை பொறுக்க வில்லை-கட்டுக் காவலும் கூடிக் கிடக்கு தங்கே: என்ற அடிகளில் இதனைக் காணலாம். தலைவன் நிலையி லிருந்தாலும் அடிமைப் புத்தி (சீவான்மாவின் நிலை) யினைக் காட்டி விடுகின்றார். தம்மையும் அறியாமல் ஆதனைச் சொல்லியே தீர்த்துவிடுகின்றார், அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போதுநான் அங்கு வருவதற் கில்லை