பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா- என் காதலி 17 7 என்ப்தில் இப்புலப்பாட்டைக் காணலாம். எப்படியோ கண்ணம்மாவைக் கூடிக் களிக்கவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாமல் போய்விடுகின்றது. இறைவன் பட்ச ப்ாதமற்றவன்தான், ஏனோ தன் அன்புக்குப் பிடிபடாதவை னாகப் போய்விடுகின்றான்? நடுமை யரசி யவள்-எதற் காகவோ நாணிக் குலைந்திடுவாள் என்ற அடியில் எம்பெருமானின் நடுவு நிலைமையையும் தனக்குக் அது கிடைக்காமல் நாணிக்குலைந்திடுவதையும். கவிஞர் காட்டிவிடுகின்றார். நம்மாழ்வார் போன்ற ஞானச் செல்வர்கள் தலைவி நிலையிலிருந்து இறைவனைக் காணா நிலையில் தமது ஏக்கத்தைப் புலப்படுத்துவதைப் போலவே, நம் கவிஞரும் தலைவன் நிலையிலிருந்து கொண்டே தமது ஏக்கத்தைத் தெரிவித்துவிடுகின்றார். கிட்டாத பகவதநுகவம் எட்டாப் பழமாக இருப்பதை எடுத்துக் காட்டுவது மிக அற்புதம்: அற்புதம். எம்பெருமானுடன் கூடிப் பிரியாமல் ஓரிரவு முழு வதும் கொஞ்சிக் குலவி, ஆடிவிளையாடி, அவன் திவ்விய மங்கள விக்கிரகத்தை ஆயிரம் கோடிமுறை தழுவித் தமது மனக்குறையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றுதான் கருதியிருந்தார். ஆனால், என் செய்வது? அப்பேறு தமக்குக் கிடைக்கவில்லையே கவிஞரே கூறுகின்றார் : கூடிப் பிரியாமலே-ஒரிராவெல்லாம் கொஞ்சிக் குலவி யங்கே, ஆடி விளையாடியே.-உன்றன் மேனியை ஆயிரங் கோடி முறை நாடித் தழுவி மனக்-குறைதீர்ந்துநான் நல்ல களி யெய்தியே பாடிப் பரவசமாய்-நிற்கவேதவம் பண்ணிய தில்லை யடி! க.பா.~12