பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 7 & கண்ண்ன் பாட்டுத்திறன் பண்டைய சங்கப்பாடல்களிலும் பிற்காலத்தில் எழுந்த பக்திப் பாசுரங்களிலும் பிரிவாற்றாமையைத் தாங்க முடியாது நாயகியே தவிப்பதாக நவிலப் பெற்றிருக்கும். இதுவே அகத்திணை நெறி. ஆனால், இங்கு நாயகன் தவிப்பதாக ஒரு புதுநெறியை வகுத்து விடுகின்றார் பாரதியார். ஆனால் சிவான்மா-கவிஞர்-தலைவன் நிலையிலிருப்பதால் இந்தப் புதுநெறி பண்டைய அ. க த் தி ைன நெறியினின்றும் விலகிப்போகவில்லை என்பதை உய்த்துணரலாம். இந்தப் பாடலை-மேலே காட்டிய பகுதியை மட்டி லும்-திரும்பத் திரும்பப் பாடி மகிழுங்கால் சிருங்கார ரசத் தின் உறைப்பு தட்டுப் படும்: பக்தியுணர்வும் இடை இடையே தலை காட்டும். சிறுசிறு நிகழ்ச்சிகளையெல்லாம் ஒன்றுகூட விடாமல் எளிய சொற்களைக் கொண்டு உயரிய முறையில் வருணிக்கும் கவிஞரின் திறன் நம் உள்ளத்தைக் கவருகின்றது. இதில் அமைந்துள்ள உருக்காட்சிகள் நம் உள்ளத்தில் அழியாத ஒவியத்தை நிலைபெறச் செய்து விடுகின்றன. ஆறாம் பாடல் : எல்லாப் பொருள்களை வருணிப்பதில் கவிஞர்கள் சிறந்து விளங்கினாலும் காதலைத் தங்கள் சொல்லோவியங்களில் காட்டும்போது வருணனையின் கோடுமுடியினை எட்டிவிடுகின்றனர். உலக தத்துவம் முழுவதையும் காதல் வாயிலாக விளக்கிவிடுகின்றனர். இயற்கையின் ஒற்றுமையை விளக்கும் ஒவ்வொரு கூறிலும் காதலின் பேராற்றலைக் காண்கின்றனர். இந்தப் பாடலில் பாரதியார் ஏராளமான உருக்காட்சி களைப் (imagery) பட்டியலிட்டுக் காட்டுகின்றார். இங்ங்ணம் காட்டுவதில் கவிஞர் தமது திறமையையெல் லாம் காட்டிவிடுகின்றார். தம் சிந்தனையை யெல்லாம்