பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் காதலி 罩亨姆 தேக்கி ஒரே இடத்தில் காட்டுகின்றார். மரபுவழியைப் பின்பற்றாமல் புதுமரபினை அமைக்கின்றார். இந்தப் பாடலில் காணும் இணையான கூறுகளை நாம் பிரித்துச் சிந்திக்க முயன்றால் காதலனது ஏக்கத்தில் துன்பமும் காதலின் நிலைமாறாத வேகமும் தெளிவாகப் புலனாகும். ஒரு சிலவற்றை மட்டிலும் ஈண்டுச் சிந்திப்போம். நம் மனத்திலிருந்து பாயும் அறிஅாகிய ஒளி இன்றேல் பார்க் கும் விழியினால் பயன் இல்லை. இவ்விரண்டையும் பிரிக்க முடியாது. அதுபோலவே, தும்பியில்லாமல் தேன் தோயாது. அங்ங்ணம் தேன்தோயும்போது அழகும் சேர்ந் தால்தான் பயன் உண்டு. இனிமையும் அழகும் இணைத் தால்தான் இரண்டிற்கும் பெருமை. பாயுமொழி நீ எனக்கு-பார்க்கும்விழி நானுனக்கு தோயுமது நீ எனக்கு-தும்பியடி நானுனக்கு விண்டுரைக்க முடியாத காதலன்-காதலி ஒற்றுமை யுணர்ச்சியை ஒன்றுக்கொன்று இன்றியமையாத இணைப் புகளின் மூலம் விளக்குவதில் பாரதிக்கு நிகர் பாரதிதான். மகளிர் வீணை வாசிக்கும்போது அழகிய விரல்கள் விணைத் தந்தியின்மீது மேவுவதே ஒரு தனியழகு. இங்ங்ணம் விரல்கள் மேவாவிடில் வீணையின் அழகிய ஆற்றல் வெளிப்படாது. ஒன்றோடொன்று விரலும் வீணையும் மருவாதவரையில் தனித்தனியாக நிற்கும் அவ் விரண்டினாலும் கண்ணிற்கோ காதிற்கோ சிறிதும் பயன் இல்லை. அதுபோலவே வெறும் மாலை அழகுக்கு அழகு செய்யமுடியாது. தனி வைரங்களும் சேர்ந்து கொலிவு அடையமுடியாது. வைரங்களின் வனப்பு முழுவதும் வெளிப்படுத்த வேண்டுமானால் மாலையின் வடம் இன்றி துமை பளித்துக