பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈岛每 கண்ணன் பாட்டுத்திறன் வீணையடி நீ எனக்கு-மேவும்விரல் நானுனக்கு பூணும்வடம் நீஎனக்கு-புதுவயிரம் நானுனக்கு இங்ஙனமே கவிஞர் இரண்டு உயிர்களைப் பிணைக்கும் காதல் உணர்ச்சியை அற்புதமாக விளக்குகின்றார். பாடல் முழுவதையும் படித்துச் சிந்தித்தால் பாரதியாரின் சிந்தனை ஊற்று வற்றாது பாய்ந்து வருவதைக் கண்டு களிக்கலாம். நல்லஉயிர் நீஎனக்கு-நாடியடி நானுனக்கு செல்வமடி நீஎனக்கு-சேமநிதி நானுனக்கு எல்லையற்ற பேரழகே!-எங்குநிறை பொற்சுடரே! முல்லைநிகர் புன்னகையாய்;-மோதுமின்பமே! கண்ணம்மா என்ற பகுதி இந்தப் பாடலுக்கே ஒரு பொலிவினைத் தருவதுபோல் தோன்றுகின்றது. தாரையும் தண் மதிய மும் அளவற்ற இன்ப்க்காட்சி தருவதையும், வீரமும் வெற்றியும் இன்றியமையாமல் இணைந்திருப்பதையும் எடுத்துக்காட்டி, தாரணியிலும் வானுலகிலும் சார்ந்திருக் கும் இன்பமெல்லாம் ஒரே உருவமாய்ச் சமைந்திருப்பதை அற்புதமாய் எடுத்துக்காட்டுவது சக்தியை நாடிபிடித்துப் பார்க்கும் பாரதியார் ஒருவராலேதான் இயலும். தாரையடி நீஎனக்கு-தண் மதியம் நானுனக்கு வீரமடி நீஎனக்கு-வெற்றியடி நானுனக்கு தாரணியில் வானுலகில்-சார்ந்திருக்கும் இன்ப மெல்லாம் ஒருருவ மாய்ச்சமைத்தாய் உள்ளமுதே! கண்ணம்மா! இங்குச் சக்தியே கண்ணம்மாவாகி விடுகின்றது. பாட்டின் முத்தாய்ப்பாக அமைந்து கிடக்கின்றது. இப்பகுதி.