பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-15 கண்ணன்-என் ஆண்டான் வைணவ தத்துவத்தில் ஒன்று சேஷ-சேஷிபாவம் (அடிமை-ஆண்டான் பாவனை) ஆகும். இதனை, அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும்பிரான்." (.ெ ந றி ைம யால் - சேஷ-சேஷிபாவமாகிற முறைமை தவறாமல்) என்ற திருவாய்மொழிப் பாசுரப் பகுதியால் அறியலாம்" உலகிலுள்ள பொருள்களெல்லாம் எம்பெருமானுடைய சிங்கல்பத்தைப் பற்றிக்கிடக்கின்றன; அப்பொருள்களினுள் எம்பெருமான் தன் சேவித்துவ முறை (ஆண்டான் என்ற முறை) தப்பாதபடி நிற்கின்றான் என்பது இதன் பொருளாகும். இந்தத் தத்துவத்தை பூதத்தாழ்வார் பாசுரம் மிகவும் தெளிவாக்கும். தனக்கடிமை பட்டது தான்.அறியானேலும் மனத்தடைய வையதாம் மாலை-வனத்திடரை 1. திருவாய் 9, 6:40