பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணன்-என் ஆண்டான் ? &# ஏரியாம் வண்ணம் இயற்றுமிது அல்லால் மாரியார் பெய்கிற்பார் மற்று: (மால் - திருமால்; வனம் திடர் - காட்டிலுள்ள மேட்டு நிலம்; இயற்றும்-வெட்டும்; மாரி - மழை) எம்பெருமான் ஆன்ம கோடிகளை உய்விக்கப் பற்பல அவதாரங்கள் எடுத்துப் படாதன படுகின்றபடியால் நம்மைத் திருத்திப் பணிகொள்ளுதல் அப்பெருமானுக்குக் கடமையாயிருக்கும் என்பது உண்மையே. ஆனால், நாம் யாதொரு முயற்சியும் செய்யவேண்டுவதில்லை என்று கருதுதல் தவறு. எம்பெருமான் நம்மை மண்ணும் மரமும் போல், கல்லும் கரியும்போல், படைக்காமல் அறிவுள்ள பொருளாகப் படைத்துள்ளான். இந்த அறிவுக்கேற்க நாம் செய்ய வேண்டியதொன்றுண்டு. அதாவது, அவனைப் பெறவேண்டும் என்ற ருசி மாத்திரம் நம்மிடம் இருக்க வேண்டியதொன்று; இதைத்தவிர, நாம் வேறு முயற்சி செய்யவேண்டியதொன்றும் இல்லை. இதுவே சாத்திரங் களின் சாரப்பொருளாகும். இப்பாகரத்தின் முன்னிரண்டு அடிகளின் ஆழ்ந்த கருத்து பின்னிரண்டு அடிகளிலுள்ள எடுத்துக்காட்டால் விளக்கப்படுகின்றது. காடு எழுந்து மேடாயிருந்த நிலத்தைச் சீர்திருத்தி ஏரியாக வெட்டுகின்றோம்; இச் செயல் மழைபெய்வதற்குச் சாதனமாக மாட்டாது; நாம் ஏரி வெட்டினோம் என்பதற்காக மழைக் கடவுள் - வருணன் -மழை பெய்விக்கமாட்டான். மழை பெய்வது இறையருளினால்; அப்படிப்பட்ட மழைக்கு ஏரி வெட்டுதல் உபாயமன்று, இஃது உலகறிந்த செய்தி. ஏரி வெட்டுதல் மழைபெய்வதற்கு உபாயம் ஆகாது என்றால் வீணாக ஏன் 3. இரண். திருவந் . 16,