பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{శ్రీశ్రీ அண்ணன் பாட்டுத்திறன் ஏரியை வெட்டவேண்டும்? என்று கருதுதலாகாது. எப்பொழுதாவது இறையருளினால் மழை பெய்யுமாகில் அந்த மழையை வனம் திடர் தாங்கிக் கொள்ள மாட்டாது. நாம் அந்த வனத்திடரைச் சீர்திருத்தி ஏரி யாக அமைத்து வைப்போமாயின் மழைபெய்யும்போது வரும் நீர் அதில் தங்குவதற்குப் பாங்காக அமையும், ஆகவே, மழைநீர் பழுது படாமைக்காக ஏரி வெட்டுதலே யன்றி மழையைப் பெய்வித்தற்காக அன்று என்பது தெளிவாகும். இவ்வாறே நாம் சேதநராகப் பிறந்துள்ள வேற்றுமைக்காக நம்முடைய நிலைமையைச் சீர்படுத்திக் கொள்ளுதல் பகவானை அடைவதற்குச் சாதனமாக மாட்டாது; ஒருகால் பகவான் நம்மைத் திருவுள்ளம் பற்ற வருவானாயின், அவனது திருவருள் நம்மிடத்தில் நன்கு தங்குவதற்குப் பாங்காகும் நம்மை, நாம் திருத்தி வைத்துக் கொள்ளவேண்டும். ஈண்டு திருத்தமுறாத சேதநரை "வனத்திடரின் நிலை யிலும், விருப்பம் முதலியவற்றால் நம் நெஞ்சைத் திருத்திக் கொள்வது ஏரியாம் வண்ணம் இயற்றுகையாம் நிலை யிலும், இறையருள் கைபுகுதல் மாரிபெய்கை நிலையிலும் வைத்து இக் கருத்தினைச் சிந்தித்து அறிதல் வேண்டும். ஒரு காரணமும் பற்றாது வரும் இறைவனது திருவருளைத் தாங்கிக் கொள்வதற்கு மாத்திரம் உறுப்பாகுமேயன்றி இறையருளை நிர்ப்பந்தப்படுத்தி உறுப்பாக மாட்டா தென்று சேதநர்களின் செயல்களின் குறிக்கோளின்மை வலியுறுத்திக் காட்டப்பட்டது இப்பாசுரத்தில். அஃதாவது, பலனை எதிர்பாராது செயலாற்றவேண்டும் என்ற கீதையின் கருத்து இஃதுடன் ஒரு புடையொத்துள்ளது என்பதையும் சிந்திக்கின்றோம். ஆண்டான்-அடிமையை விளக்கும் பூதத்தாழ் வாரின் இன்னொரு பாசுரத்தையும் காண்போம்.