பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் ஆண்டான் 算器器 திருமங்கை நின்றருளும் தெய்வம் நாவாழ்த்தும் கருமம் கடைப்பிடிமின் கண்டீர்-உரிமையால் ஏத்தினோம் பாதம் இருதடக்கை எந்தைபேர் நாற்றிசையும் கேட்டீரே நாம்." 'பிராட்டி சம்பந்தத்தால் மேன்மை பெற்ற சீமன் நாராயணன்தான் ப்ரதெய்வம்; அவனை நாவினால் வாழ்த்தும் செயலை உறுதியாகக் கடைப்பிடியுங்கள்’ என் கின்றார் ஆழ்வார். இப் பாசுரத்தில் உரிமையால் என்ற தொடர் உயிராயது; அதாவது ஆண்டான்-அடிமை (சேவி-சேஷத்துவம்) என்ற சம்பந்த முறைமை கொண்டு என்றபடி. இதை இன்னும் தெளிவாக விளக்குவது இன்றியமையாததாகின்றது. எம்பெருமான் பொதுவாக சேதநர்கட்கும் அசேதநப் பொருள்கட்கும் சம்பந்த முடையவன்; இவை இரண்டும் அவனுக்கு உடலாக உடையவை. அசேதநப் பொருள்கள் அவனுக்காகஅவன் பயனுக்காக இருப்பவை: அறிவையுடைய சேதநர் கட்குச் சிறப்பான முறையில் சுவாமி-அல்லது ஆண்டானாக-இருப்பவன் எ ம் .ெ ப ரு ம .ா ன் . ஆண்டவனுக்கு அடிமையாக இருக்கும்போது சீவர்கள்சேதநர்கள்-அசேதநங்களை போலவே அவன் விருப்பப் படி பயன்படுத்திக் கொள்ளப்படுபவர்களாக இருப்பர்; சிறப்பான முறையில் சீவர்கள் அடியவர்களாக இருந்து அடிமைத் தொழில் (கைங்கரியம்) செய்பவர்களாக இருப்பர். வைணவ தத்துவத்தில் இறைவனுக்குச் செய்யும் கைங்கரியமே பரம புருஷார்த்தமாகும்: அதாவது சீவர் கள் அடையத்தக்க உயர்ந்த குறிக்கோளாகும். இந்தக் 3. மேலது. 57, 4. கிங்கரன் . வேலையாள்; கிங்கரன் .ெ ச ய் வ து கைங்கரியம்; அதாவது அடிமைத் தொழில் .