பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీశ్రీ கண்ணன் பாட்டுத்திறன் கருத்தின் அடிப்படிையில் கண்ணன்-என் ஆண்டான்' என்ற பாடலை ஆராய்வோம். இந்தப் பாடல் கோபாலகிருஷ்ண பாரதியின் 'நந்தனாரி கீர்த்தனைகள்”போல் அமைந்துள்ளது. எனினும், இது தனித்தன்மையுடன் திகழ்கின்றது. நம்மாழ்வாருக்கு 'உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்' ஆக இருந்தான். கிறித்தவப் பெருமக்கள் தம் அன்றாடக் கடவுள் வழிபாட்டில் "கர்த்தனே, எங்கட்கு அன்றாடம் உண்ணக் கூடிய ரொட்டியை அருளுவாய்' என்று வேண்டுவர் இங்கு நம் கவிஞர் இறைவனைத் தன் ஆண்டானாகக் கருதித் தனக்கு அன்றாடத் தேவைக்குரிய பொருள்களை அருளுமாறு வேண்டுகின்றார். அதற்குமுன்னர், தஞ்சம் உலகினில் எங்கணு மின்றித் தவித்துத் தடுமாறி பஞ்சப் பறையன் அடிமை புகுந்தேன் பாரமுனக் காண்டே ஆண்டே!-பாரமுனக் காண்டே! என்று கூறி ஆண்டானிடம் தஞ்சம் அடைகின்றார். 'பறையன்' என்பது ஈண்டுச் சாதியைக் குறிப்பதன்று, இது தாழ்மையுணர்ச்சியைக்-பணிவினைக் (Humility) குறிப்பிடுகின்றது. "துன்பமும் நோயும் மிடிமையும் தீர்த்துச் சுகம் அருளுமாறு வேண்டுகின்றார். சேரி முழுதும் குதித்துக் குதித்துப், பேரிகை கொட்டித், திசைகள் அதிரக் கண்ணன் புகழ்பாடிக் களித்து மகிழ்வதாகக் கூறு கின்றார். பறையர்களில் தாம் பாக்கியசாலி என்று சொல்லிக் கொள்ளுகின்றார். கவிஞர் கூறுவார் : 5. திருவாய். 6, 7:1