பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-2 இறைவனுடன் நமது உறவுகள் எல்லாம் வல்ல எம்பெருமானாகிய சர்வேசுவரனுக்கும் ஆன்ம கோடிகளாகிய-அதாவது சீவான்மாக்களாகியநமக்கும் உள்ள உறவை அறிந்துகொள்வதே சம்பந்த ஞானம் என்று வழங்கப்பெறுவது. இந்தச் சம்பந்த ஞானம் இல்லாத காரணத்தினால்தான் நெடுங்காலமாக எம்பெருமானைவிட்டுப் பிரிந்து சம்சாரமாகிய பிறவிக் கடலில் ஆழ்ந்து தத்தளிக்கின்றோம்; துன்புறுகின்றோம். சர்வேசுவரனையும் நம்மையும்பொருத்திவைப்பது இந்தச் சம்பந்த ஞானமாகும். சம்பந்த ஞானமுடைய இடத்தில் எம்பெருமான் விரும்பியடைவான். ஆதலால், சம்பந்த ஞானம் அவன்மீது-அந்த எம்பெருமான்மீது-விருப்பம் கொள்வதற்கு உரியதாகின்றது. இந்த ஞானமில்லாத சன்மம்-பிறப்பு-பிறப்பென்று சொல்வதற்கே தகுதி யாவதில்லை. இந்தக் கருத்தைத் திருமழிசையாழ்வார் மிக அற்புத மாகப் புலப்படுத்துகின்றார். நின்ற தெந்தை ஊர கத்து இருந்த தெந்தை பாட கத்து அன்று வெஃக ணைக்கி டந்த(து) என்னி லாத முன்னெ லாம்