பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் என் ஆண்டான் 18? பண்ணைப் பறையர்தங் கூட்டத்தி லேயிவன் பாக்கிய மோங்கி விட்டான் கண்ண னடிமை இவனெனுங் கீர்த்தியில் காதலுற் றிங்கு வந்தேன் ஆண்டே!-காதலுற் றிங்குவந்தேன். அடுத்து, கண்ணன்-என் சேவகன்” என்பதில் தான் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வதாகச் சொல்லு வதைப்போல் இங்குக் காடு கழனிகள் காலிகள் வேலைக ளனைத்தையும் செய்வதாகக் கூறுவர். பயிர்த்தொழிலுக் கேற்றவாறு மழைக் குறியைத் தப்பாமல் சொல்லுந் திறமை பெற்றிருப்பதாகவும், தன் வேலைத் திறமையைப் பார்த்துப் பின்னர் பக்குவம் பகருமாறும் பணிக்கின்றார். தன் அன்றாடத் தேவைகளைப் பட்டியலிட்டுக் காட்டு கின்றார் : பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப் பிழைத்திட வேண்டு மையே! அண்டை அயலுக்கென் னாலுப காரங்கள் ஆகிட வேண்டு மையே! உபகாரங்கள்-ஆகிவிட வேண்டுமையே! மானத்தைக் காக்கவோர் நாலு முழத்துணி வாங்கித் தரவேணும்; தானத்துக் குச்சில வேட்டிகள் வாங்கித் தரவும் கடனாண்டே! சிலவேட்டி-தரவுங் கடனாண்டே. அடுத்து, ஒன்பது வாயிற் குடிலினைக் கற்றி வரும் பேய்களை-அதாவது புலன்களால் ஏற்படும் தொல்லை களை-அடக்குவதற்கு வேண்டிய மந்திரத்தை வேண்டு வதாகக் கூறுகின்றார். இங்கு அவர் திருமந்திரத்தைஎட்டு எழுத்து மந்திரத்தை-நினைப்பதாகக் கொள்ளு வதில் தவறில்லை.