பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்-என் ஆண்டான் £83 அவன் கழுத்தை இறுகப் பற்றிக்கொண்டு போகற்க என்னைத் தனியே விட்டு ஏகுவது அறமன்று. நீ இல்லாமல் யான் படுத் துயரங்கள் எண்ணிலடங்கா. இனி ஒரு நொடிகூட உன்னைப் பிரிந்திரேன்’ என்று பிடிவாதம் செய்கின்றாள். அவன் முறுவிலித்துத் தான் மேற்கொள்ள விருக்கும் செயலின் அவசரத்தை அவசியத்தை எடுத்துக் கூற முயல்கின்றான். அப்பொழுது காதலி முறுவலிக் காதே. உன் முறுவலின் கருத்தை யான் அறிவேன். உன்னை நான் விடவே மாட்டேன்’ என்று இறுகக் கட்டி அணைக்கின்றாள். உடனே விழிப்பு ஏற்பட்டுவிடுகின்றது, வெறுங்கையைத் தன் மார்புடன் அனைத்திருப்பதைக் காண்கின்றாள். எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப்" ப்ோனது தெளிவாகின்றது. மீளாத துன்பததிற்குத் தான் ஆளானதை உணர்கின்றாள்-ஓ" என்று நடுக்காட்டில் அலறுகின்றாள். இங்கே கவிஞன் தோல்வியுற்ற அரசனின் தேவி படுந்துயரங்களை விளக்க அழகிய உத்தியைக் கையாண் டுள்ளான். இங்கு நிலைத்து நிற்கும் மனோபாவம் துக்கமே நிகழ்ச்சியை விளக்கும் கவிதைகளைப் படித்து அநுபவிக்கும்போது நமது உள்ளம் துக்க உணர்ச்சியால் பூரிக்கத் தொடங்குகின்றது; இப்போது கருண ரசம்' பிறக்கின்றது. கருன ரசம் உலகின் அடிப்படையான உண்மை நிலையில் கிடக்கின்றது. ஆன்மாவும் உலகும் பின்னிக் கிடப்பதாக அறிஞர்கள் கூறுவர். ஆன்மாவின் கூறு இன்பமாகவும் உலகின் பங்கு துன்பமாகவும் இருப் பதாக பெரியோர்கள் உணர்த்துவர். துன்பத்தில் இன்பத்தைக் காண்பது உலக வாயிலாக ஆன்மாவை உணர்வதாகும். ஆகவே, கருண ரசத்தைச் சிறந்ததாக்க குறிப்பிடுவர் அறிஞர்கள். வால்மீகி கிரெளஞ்சப் பறவை கள் இறந்ததைக் கண்டு மனம் துக்கத்தில் ஆழ்ந்து கிடக்