பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19t; கண்ணன் பாட்டுத்திறன் குடக்கும்போது-உள்ளம் பூரித்திருக்கும்போது-கருணம் பிறந்ததாகவும் அப்போதுதான் இராமாயணம் உதய மாயிற்று என்றும் சொல்வதுண்டு, பவபூதி என்ற கவிஞர் உத்தர ராமாயணத்தில் இந்தக் கருண ரஸத்தை நன்கு வளர்த்துக் காட்டியுள்ளார். பாரதியின் இந்தக் கவிதையில் உள்ளம் தோயும் போது அற்புதமும் கருணமும் பிறப்பதைக் கண்டு அநுப விக்கலாம்.