பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-17 கண்ணம்மா-என் குலதெய்வம் எல்லாச் சமயங்களுமே இறைவனைச் சரண் அடை தலைப் பேசுகின்றன. வைணவதத்துவம் பிரபத்தி நெறி அல்லது சரணா கதியை முக்தி யடையும் ஒரு நெறியாகவே பேசுகின்றது. நிசுர்இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே புகல்ஒன்று இல்லா அடியேன்உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே." என்று நம்மாழ்வார் திருவேங்கடமுடையானைச் சரண் அடைகின்றார். பிறிதோர் இடத்தில் இந்த ஆழ்வார், சரணமாகும் தனதாள் அடைந் தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” என்று சரணம் அடைதலைப்பற்றிப் பேசுகின்றார். எம்பெருமானிடம் அடைக்கலம் புகுந்து விட்டாலும் ஒருவரது பிராரப்த கருமம் தீரும் வரையில் காத்திருக்கத் திெருவாய். 6. 10:10 2. மேலது 9, 10:5