பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈姆器 கண்ணன் பாட்டுத்திறன் தான் வேண்டும் என்ற தத்துவத்தை விளக்குகின்றது இந்தப் பாசுரப் பகுதி. திருமழிசை பிரான் எம்பெருமான் திருவடியில் அடைக்கலம் புகுகின்றார். புகுந்தவர், அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே” என்று தன்னை நோக்கி அஞ்சற்க என்று திருவாய் மலர வேண்டும் என்று எம்பெருமானை இறைஞ்சுகின்றார். திருமங்கையாழ்வாரும், தேன்ஏய் பூம்பொழில்சூழ் திருவேங் «${.......{ f}{?” í {} 3ö) {5}} 6TʻGöT ஆனாய்! வந்துஅடைந்தேன் அடியேனை ஆட்கொண் டருளே.' என்று வேங்கடவாணனை வேண்டுகின்றார். இவரே அரங்கத்து அம்மானை, ஆழி வண்ணநின் அடியிணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத் தம்மானே." (ஆழி - கடல்; அணி பொழில் - அழகான சோலை.) என்று சரண் அடைகின்றார்; இந்தத் திருமொழி ஒன்பது பாசுரங்களும் இங்ங்ணம் பல்லவிபோல் சரணாகதி தத்து வத்தையே பேசுகின்றன. திருமங்கையாழ்வாரி திருக் குடந்தை ஆரா அமுதனை, 3. திருச்சந்த -92 4. பெரி. திரு. 1. 9:2 5. பெரியாழ், திரு. 5. 8: !