பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் குலதெய்வம் Í $3 ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்த்த பரம! நின் அடிஇணை பணிவண் வரும் இடர் அகல மாற்றோ வினையே’ என்று சரண் அடைகின்றதைக் காண்கின்றோம். நாயன் மார் திருப்பாடல்களிலும் இத் தத்துவம் ஆங்காங்கு பளிச்சிடுகின்றது. மாணிக்கவாசகரின் அடைக்கலப் பத்தும் இந் நெறியையே எடுத்தோதுகின்றது. ஒரு தடவைக் கொன்பது தடவையாக ஒன்பது திருப்பாடல் களும், அழுக்கு மனத்தடி யேன்உடை யாய்!உன் அடைக்கலமே' என்ற பாணியிலேயே அமைந்துள்ளன. கிறித்தவப் பெரு மக்களும் கிறித்துவப் பெருமானின் இந் நெறியினை நினைந்து அடைக்கலம்’, ‘அடைக்கலசாமி என்று தம் குழவிகட்குத் திருநாமம் சூட்டுவதையும் காண்கின்றோம். பாரதியார் கண்ணம்மா-என் குல தெய்வம் என்ற தலைப்பிலுள்ள கண்ணன் பாட்டில் இந்த நெறியினையே எடுத்தோதுகின்றார். இங்குக் கண்ணன் பாரதிக்கு மிகவும் பிடித்த அருள் சக்தியாக-கண்ணம்மாவாக-மாறி அவன் இதயகமலத்தில் அமர்கின்றான். நின்னைச் சரணடைந்தேன்-கண்ணம்மா! நின்னைச் சரணடைந்தேன் என்று பாடல் தொடங்குகின்றது. பொன்னையும் உயர் வையும் புகழையும் கொன்றழிக்கும் கவலைகள் த ன் னை த்-தன் ஆன்மாவைத்-தின்னத்தகாதென்று 6. திரு எழுகூற்றிருக்கை-அடி 45 - 48 7. திருவாசகம் - அடைக்கலப்பத்து 8. மேலது. பாடல், ! க.பா.-13