பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I94 கண்ணன் பாட்டுத்திறன் கண்ணம்மாவிடம் முறையிடுகின்றார்; அன்னை நிலையி லுள்ள கண்ணம்மாவைக் கற்பனையில் காண்கின்றார். மிடிமையும் அச்சமும் மேவிஎன் நெஞ்சினில் குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா! என்று கண்ணம்மாவிடம் வேண்டுகோள் விடுக்கின்றார். அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றுஅவள்தன் அருள் நினைந்தே அழுங்குழவி.9 யாக இருந்து கொண்டு முறையிடுகின்றார். நல்லது தீயது நாமறியோம் அன்னை! நல்லது நாட்டுக! தீமையை ஒட்டுக! நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா! என்று இப்பாடல் முடிவடைகின்றது. இந்த அடிகள் பெரியாழ்வாரின், நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்' என்ற அடியை நினைவுகூரச் செய்கின்றன. பெரியாழ் வாரின் இக் கருத்துதான் பாரதியாரின் பாடற் போக் 9. பெரு. திரு. 5:1 10. பெரியாழ். திரு. 5. 1:3