பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் குலதெய்வம் 195 கிற்கு வழியமைத்துத் தந்ததோ என்று கூடக் கருதத் தோன்றுகின்றது. ‘சுதந்திரப் பள்ளுப் பாடும்போதுகூட கைங்கரிய ருசி தலையெடுக்கின்றது. பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்ல்ோம்-பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். என்று கூறுவதில் பரிபூரணன் என்ற தொடர். கன்ன னையே குறிக்கின்றது. பிறிதோர் இடத்தில்’ "எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன்' என்றுரைத்தான் கண்ண பெருமான்; எல்லாரும் அமரநிலையை எய்தும்நன் முறையை, இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்ஆம் இந்தியா உலகிற் களிக்கும். என்று கீதையின் பெருமையை எடுத்துக் காட்டிக் கீதாசாரியனின் புகழ் பாடுகின்றார். "ஆறுதுணை' என்ற பாடலின், பாம்புத் தலைமேலே-நடஞ்செயும் பாதத்தினைப் புகழ்வோம் மாம்பழ வாயினிலே-குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம் என்று கண்ணனைத் தனக்குத் துணை புரியும் தெய்வ மாக் கருதுகின்றார். 11. தேசிய கீதங்கள்-31 சுதந்திரப் பள்ளு 12. g & -17 பாரத சமுதாயம் 13. தோ. பா.-1. ஆறு துணை