பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{Ꭶij கண்ணன் பாட்டுத்திறன் எம்பெருமானைச் சரணம் அடையும்போது சேதநன் இலக்குமியைப்-பெரிய பிராட்டியாரைப்-புருஷகார மாக பற்றவேண்டும் என்பது வைணவதத்துவம். இதனால் பெரிய பிராட்டியார் புருஷகார பூதை' என்று வழங்கப்படு கின்றார். சேததன் பல தீங்குகளைப் புரிந்தவன்; ஆகவே, ஆவன் இறைவனால் தண்டிக்கப்பட வேண்டியவன். ஆனால் அவன் தன்னைக் காப்பாற்றுமாறு இறைவனை நாடி வருகின்றான். பிராட்டியார் அவனைக் காப்பாற்று மாறு பரிந்துரைக்கின்றார். இறைவனை நாடாது தன் னிச்சைப்படி செயற்படும் சேதநனைச் சாத்திர முறைப்படி தண்டிக்குமாறும், எம்பெருமானை நாடிவந்தவனை இரட்சிக்குமாறும் பரிந்துரைக்கின்றார். அப்பொழுது தான் சாத்திரமும் எம்பெருமானின் அருட்குணமும் நிலை பெறும் என்கின்றார். இங்ங்ணம் பல இனிய சொற்களால் எம்பெருமானின் சினத்தை மாற்றி அவனுக்குச் சேததனிடம் அருள் பிறக்குமாறு செய்பவர் பிராட்டியார். இவ்வினிய சொற்களாலும் ஈசுவரனது நெஞ்சு இளக வில்லையேல் பிராட்டியார் தம் அழகைக் காட்டி அவனைத் தம் வசப்படுத்திச் சேதநனை ஏற்றுக் கொள்ளுமாறு. செய்வர். எனவே, சேதநனுக்குப் பிராட்டியாரின் புருஷகாரம் தேவைப்படுகின்றது. இதனைப் பிள்ளை உலக ஆசிரியர், சேததனை அருளாலே திருத்தும் ஈசுவரனை அழகாலே திருத்தும்" என்று விளக்குவர். இதனால் ஈசுவரனும் பிராட்டியாருக் காகவே சேதநனின் குற்றங்களைப் பொறுக்கின்றான். இது வைணவதத்துவம். 14. புருஷகாரபூதை-தகவுரை கூறுபவள் 15. பூர் வசன பூஷணம்-14 (புருடோத்தம நாயுடு பதிப்பு)