பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் குலதெய்வம் Ig?“ பாரதியார் இந்தத் தத்துவத்தை அறிந்தவர் என்று கருதுவதில் தவறில்லை. இலக்குமிபற்றி வரும் பாடல்கள் யாவும் இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் ஆக்கி இருக்கவேண்டும். திருமகளைச் சரண்புகுதல்" என்ற தலைப்பிலுள்ள பாடலில், மாதவன் சக்தியினைச்-செய்ய மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம் வாதனை பொறுக்க வில்லை-அன்னை மாமகள் அடியிணைச் சரண் புகுவோம் என்ற பகுதியில் இக்கருத்தினைக் காணலாம். மாதவன் சக்தி என்பது எம்பெருமானின் அருட்குணம். அதனைச் சரியாகச் செயற்படச் செய்வது. பிராட்டியாரின் புருஷகாரம் என்பது தெளிவாகின்றதல்லவா? கண்ணனைக் குலதெய்வமாகக் கொண்ட பாரதியின் எண்ணத்தை இன்னொரு பாடலிலும் காணலாம். வருவாய் கண்ணா” என்ற தலைப்பில் காணப்பெறும் இசைப் பாடிலொன்றில், வருவாய் வருவாய் வருவாய்-கண்ணா வருவாய் வருவாய் வருவாய் என்று பல்லவி தொடங்குகின்றது, அடுத்து சரணங் களில்", உருவாய் அறிவில் ஒளிர்வாய்-கண்ணா! உயிரின் அமுதாய்ப் பொழிவாய்-கண்ணா! கருவாய் என்னுள் வளர்வாய்-கண்ணா! கமலத் திருவோ டிணைவாய்-கண்ணா (வருவாய்) இந்தப் பாடற்பகுதி பூத்தாழ்வாரின், 16. தோ. பா.-19. காண்க. 17, மேலது - 46,