பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

運98 கண்ணன் பாட்டுத்திறன் கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன் திருக்கோட்டி எந்தை திறம்" (கருக்கோட்டி கருவறை) என்ற பாகரப் பகுதியையும், திருமழிசையாழ்வாரின், என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத் தேவைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை-என்றும் திருஇருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கருவிருந்த நாள்முதலாக் அாப்பு. 9 (ஆள் - அடிமை) என்ற பாசுரப் பகுதியையும் ஒருபுடை யொக்கும். தாம் கருவில் கிடந்த நாள்தொட்டு எம்பெருமான் ஒரு கிாரணமும் பற்றாது தம்மை ஆட்கொண்டதாகப் பேசுகின்றார் பூதத்தாழ்வார். தாம் கருவறையில் வாழத் தொடங்கிய நாள்முதல் எம்பெருமான் தம்மைக் காத்து வருவதாகக் கூறுகின்றார் திருமழிசையாழ்வார். தாம் கருவாய் இருந்து கண்ணனும் தம்முடன் அந்தர் யாமியாய் இருந்து வளர்வதைக் குறிப்பிடுகின்றார் காரதியார். வைணவ தத்துவப்படி எம்பெருமான் உடலிலும் உள்ளான், உயிரிலும் உள்ளான். 18. இரண். திருவந். 87 19. நான் திருவந் 92