பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணம்மா-என் குலதெய்வம் 199 அடியோன் உள்ளான் உடல் உள்ளான்' (அடியேன், இங்கு ஆன்மா) என்ாது நம்மாழ்வாரின் உயிரணயை பாசுரப்பகுதி. இத்தகைய எம்ப்ெருமானை, உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே.' என்கின்றார் ஆழ்வார். உணர்வின் உள்ளே இருத்தினேன் என்பதற்கு அவனை என்னுடைய ஞானத்திற்கு விஷய மாக்கினேன்’ என்று பொருள் கொள்வர் உரையாசிரியர் கள். அதுவும் அவனது இன்னருளே என்ற தொடர் 'அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்ற மணிவாசகப் பெருமானின் திருவாக்கை நினைவுகூரச் செய்கின்றது. அந்தர்யாமியாய் உள்ள எம்பெருமான் நம் இதயத்தாமரையின்மீது பெரிய பிராட்டியாரோடு கட்டைவிரலளவாய் (அங்குஷ்ட ப்ரமாணமாய்) எழுந் தருளியிருப்பான் என்று பிள்ளை உலக ஆசிரியரின் *தத்துவத் திரயம் என்ற நூல்" குறிப்பிடும். இதனைத் தான் பாரதியாரும் மேற்குறிப்பிட்ட இசைப்பாடலில், இணைவாய் எனதா வியிலே-கண்ணா இதயந் தனிலே யமர்வாய்-கண்ணா என்று குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். இணைவாய் என தாவியிலே’ என்ற அடி அடியேன் உள்ளான்” என்ற 20. திருவாய் 8, 8 : 2 21. மேலது 8, 8 : 3 22. திருவா. சிவபுரா. அடி. 17 28. ஈசுவரப் பிரகரணம் - 58,