பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-18 கண்ணனைப்பற்றிய தனிப்பாடல்கள் கம்முடைய பாரத நாட்டின் குல தெய்வமாகிவிட்ட கண்ணனுக்குப் பாமாலை சூட்டாத கவிஞர்கள் அரியர். ஆயினும், இந்தத் தெய்வத்தைப் பாரத நாடு நெடு நாட்களாக மறந்திருந்தது: எப்படியோ திடீரென்று விழித்துக் கொண்டது. இதன் எதிரில் கீதையை உபதேசித்துப் பார்த்தனுடைய தேரை வெற்றிபெற ஒட்டிய கண்ணபிரானின் உருவமே தோன்றியது. 'பார்த்தசாரதி' என்ற திருநாமத்தில் செளலப்பிய குணம் நிறைந்து நிற்கின்றதல்லவா? இந்த எளிய தன்மையைக் கொண்ட உருவம் பாரதியின் இதயத்திலும் எழுந்து இவருடைய கவிதைகிட்கெல்லாம் ஓர் உயிரூட்டத்தைத்ஒரு வித சோபையைத்-தந்துள்ளது. இப் பாட்டில் தேரும் தேர்ப்பாகனும் குறியீடுகளாக அமைகின்றன. எம்பெருமான் சேதநனை உய்விக்க மேற்கொள்ளும் வழிகள் விளங்காப் புதிர்களாகவே உள்ளன. அவன் சிவகோடிகள் யாவும் கைப்பாவைகளே. பாடலில் குறிப்பிடப்பெற்றுள்ள பார்த்தன் பிரபத்தி நெறிக்குக்-சரணாகதித் தத்துவத்திற்குக் குறியீடாக 1. தோ. பா.-15 ஆரிய கரிசனம்