பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றி ப. தனிப்பாடல்கள் 盛{}荔 உள்ளான். கீதை தரும் செய்தியும் இதுவேயாகும். மேலும் பாரித்தனுடைய தேரில் தலைவனான கண்ணன் முன்பும், பார்த்தன் பின்பும் வீற்றிருப்பது போல, பிரணவத்தில்ஒம் என்ற மொழியில்’-பகவானைக் கூறும் அகாரம்" முன்பும் அடியவனான சீவனைக் கூறும் மகாரம் பின்பும் இருப்பதால், பிரணவதிற்கு பார்த்தன் தேரை ஒப்பிடுவது முன்னோர் வழக்காகும். கண்ணனைப்பற்றிக் கண்ணன் பாட்டு என்ற தலைப் பில் காணப்படும் இருபத்து மூன்று பாடல்களைத் தவிர, "தோத்திரப் பாடல்கள்’, ‘வேதாந்தப் பாடல்கள் என்ற பிரிவுகளில் பல்வேறு தலைப்புகளில் பதிநான்கு பாடல் கள் காணப்படுகின்றன. பல இயல்களிலும் சில பாடல் களைக் குறிப்பிட்டுள்ளேன்; எஞ்சியவற்றை ஈண்டுக் காட்டு வேன் . 'ஆரியதரிசனம்" என்ற தலைப்பில் காணப்பெறும் ஒரு பாடலில், பார்த்தன் செல்வத் தேர்ஏறு சாரதியாய்' நின்ற காட்சி காட்டப்பெறுகின்றது. இந்தப் பாடல், கனவாகப் பாரதியிடம் முகிழ்த்தது. கனவில் ஒரு கானகம்: அடர் கானகம். வான்முகட்டில் மதியொளி தென்படு கின்றது. அந்தக் கான்கத்தில் ஒரு குன்றம்; அதைச் சுற்றி லும் சுனைகளும் பொய்கைகளும் நிறைந்துள்ளன. அந்தக் குன்றத்தின்மீது பார்த்தன் வீற்றிருந்த தேர் தென்படுகின்றது. பார்த்தசாரதி தேரின் முன்பக்கம் காணப்படுகின்றான். அவன் சீரினைக் கண்டு திகைத்து நிற்கின்றார் கவிஞர். அவனுடைய எழில் கொழிக்கும் திரு உருவமும் அருள் பொங்கு விழியும் கையில் இலங்கும் கதர் சனம் என்னும் திகிரியும் கவிஞரின் கண்ணையும் கருத்தை 2. 'ஓம்' என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்துகள் கொண்டது. 3. தோ, பா.-15 ஆரிய தரிசனம்