பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多鲁4 கண்ணன் பாட்டுத்திறன் யும் கவர்கின்றன். களிப்ம்ை அவரிடம் எழச்செய்கின்றன. அந்த எக்களிப்பில் கிருஷ்ண்ார்ச்சுன தரிசனம் அற்புத மான இசைப்பாடல் வடிவம் கொள்ளுகின்றது. கண்ணனைக் கண்டேன்-எங்கள் கண்ணனைக் கண்டேன்.--மணி வண்ணனை ஞான மலையினைக் கண்டேன் கனவென்ன கனவே என்கின்றார், போர்க்களத்தைக் காண்கின்றார். தேர் களும் யானைகளும், பரிகளும் வீரர்களும் அணி வகுத்து நிற்பதைக் காண்கின்றார். கண்ணன் நேரில் ஒர் இளைஞன் காணப்படுகின்றான். கண்ணனற் றேரில்-நீலக் கண்ணனற் றேரில்-மிக எண்ணயர்ந் தானோர் இளைஞனைக் கண்டேன் கனவென்ன கனவே. என்று பாடுகின்றார். அந்த இளைஞனின் தோற்றத்தை, வீரிய வடிவம்!--என்ன வீரிய வடிவம்!-இந்த ஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென்விந்தை! விசயன்கொல் இவனே! என்று காட்டுகின்றார். பார்த்தன் சோகமுற்ற நிலையில் கேசுகின்றான் : வெற்றியை வேண்டேன்;-ஐய, வெற்றியை வேண்டேன்;-உயிர் அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன் பெற்றதென் பேறே.” சுற்றங் கொல்வேனோ?-என்றன் சுற்றங் கொல்வேனோ?-கிளை அற்றபின் செய்யும் அரசுமோ ரரசோ? பெற்றதென் பேறே: