பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனை ப்பற்றிய தனிப்பாடல்கள் 205 இங்ங்ணம் மாயையின் வசப்பட்ட வெஞ்சிலை வீரன் பேசுவதைக்கேட்ட பார்த்தசாரதி "செம்மலர் வதனத்தில் சிறுநகை பூத்தான்." பார்த்தனைச் செயற்படுத்துகின் றான் : வில்லினை எடடா-கையில் வில்லினை எடடா-அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய் திடடா வில்லினை எடடா. என்று ஆணையிடுகின்றான். வாடி நில்லாதே;-மனம் வாடி நில்லாதே;-வெறும் பேடியர் ஞானப் பிதற்றல்சொல் லாதே வில்லினை எடடா. என்று உற்சாகம் ஊட்டுகின்றான். 'ப்ார்த்தா, இப்போது உன்னிடம் தோன்றியுள்ளது விபரீத ஞானம். அதன் காரணமாகவே, நித்தியமான ஆன்மாவுக்கு யாதொரு தொடர்பும் படாமல் அநித்தியமாகிய உடலைப்பற்றிய தாய் முதலியோரிடத்துச் சுற்றத்தவர் என்ற பொய் அன்பு உன்னிடம் நிலைபெற்று நிற்கின்றது. கடைப்பூதங் களான நிலம், நீரி, காற்று, வானம் என்பனவற்றினுள்ளே மனிதன் புகுந்து அவற்றைக் கொண்டு பல்வேறு தொழில் களை நடத்துவதைப் போலவே, இறைவனும் உயிருள்ள பொருள்களினிடத்தும், அந்தர யாமியாகத் தங்கியிருந்து தொழில் நடத்துகின்றான் என்பதைத் தெளிவாயாக. என்னை நீ புகலக் கேண்மோ "எங்குமாய் யாவும் ஆகி மன்னிய பொருளும் யானே! மறைக்கெலாம் முடிவும் யானே’ (வில்லிபாரதம்)