பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 கண்ணன் பாட்டுத்திறன் என்ற உண்மையையும் உணர்வாயாக, என்று கூறுகின் றான். மேலும், விளக்கம் அடைவதற்குத் தன் நிலையை "விகவரூபமாக’க் காட்டுகின்றான். சீவான்மாவுக்கும் பரமான்மாவுக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றான். "தர்மங்களையெல்லாம் அறவே ஒதுக்கித் தள்ளிவிட்டு என்னைச் சரணடைக: பாவங்கள் அனைத்தினின்றும் உன்னை நான் விடுவிப்பேன். வருந்தாதே' என்பது கீதோபதேசம். ப்ாரதியார் இதனை, செய்தலுன் கடனே-அறம் செய்தலுன் கடனே-அதில் எய்துறும் விளைவினில் எண்ணம்வைக் காதே. என்று பேசுகின்றார். அந்நிய ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்திய மக்களைக் கிளர்ந்தெழுந்து சுதந்திரப் போரில் குதிக்குமாறு கவிஞரின் அறைகூவலே இது என்று இதனைக் கருதலாம். ஆன்றாடம் வாழ்வே சதம் என்று கருதி மயங்கி நிற்கும் மக்களுக்குப் புதிய வாழ்வில் புகுவதற்கு மக்கள் யாவரும் கதந்திரப் போரில் பங்குபெற வேண்டும் என்பதே பாரதியின் கீதோபதேசம். 'கண்ணனை வேண்டுதல்' என்ற ஒரு பாடலிலும் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டுதான் கீதாசாரியனை வழிபடுகின்றார் கவிஞர். எங்க ளாரிய பூமியெ னும்பயிர் மங்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும் துங்க முற்ற துணைமுகி லே! மலர்ச் செங்க ணாய்நின் பதமலர் சிந்திப்பாம். இதனைத் தொடர்ந்து வரும் பாடல்களில் நாட்டு நலனையே திரும்பத் திரும்ப வேண்டுவதைக் காணலாம். 4. பகவத் கீதை 18 : 66. 45 سن-.35m . LIrr) . 5