பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனுடன் நமது உறவுகள் 鄧 தான். எ ன் னி ட ம் ருசி உண்டாக்குகை அவனுக்குச் சாத்தியம் (பலன்); அதற்குச் சாதனம் (வழிமுறைகள்) நிற்றல், இருத்தல், கிடத்தல் என்றவை. பலன் கை புகுத் ததும்-என்னிடம் ருசி பிறந்ததும்-அவன் திவ்விய தேசங்களில் நிற்றல், இருத்தல், கிடத்தல்களைத் தவிர்த்து, அரவத்து அமளியி னோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து" என்று பெரியாழ்வார் கருதுவதைப்போலே, அந்த விருப்பு களையெல்லாம் என் நெஞ்சிலே செய்தருளினான்’ என் கின்றார். அடுத்த பாசுரத்தில் 'எம்பெருமான் திருவேங் கடத்தில் நிற்பதும், திரு நாட்டில் (ப்ரமபதத்தில்) இருப்ப தும், திருப்பாற் கடலில் கிடப்பதும் தன்னோடு உண்டான முறையை அறியாது நான் ஆற்றலற்றிருந்த காலத்தில் தான், நான் முறையறிந்துப் (சம்பந்த ஞானம் பெற்றுப்) பரிமாறின. பின்னர் அவ்வெம்பெருமானுடைய கரிமாற்ற மெல்லாம் என் நெஞ்சில்-என் இதயத்தில்-நடைப்ெறு கின்றது என்று மேலும் இதனை உறுதிப்படுத்திப் பேசுவர் ஆழ்வார். நம்மாழ்வாரும் இந்த சம்பந்த ஞானத்தின் பெருமை யைத் திருவாய்மொழியில் குறிப்பிடுகின்றார். அடங்குஎழில் சம்பத்து அடங்கக்கண்டு, ஈசன் அடங்குஎழில் அஃது என்று அடங்குக உள்ளே..? 5. பெரியாழ். திரு. 5, 2:10 6. திருச்சந்த-65 7. திருவாய். 1, 2 :7