பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனைப்பற்றிய தனிப்பாடல்கள் 397 வீரர் தெய்வதம் கர்ம விளக்குநற் பார தர்செய் தவத்தின் பயனெனும் தார விர்த்த தடம்புயப் பார்த்தனோர் கார ணம்மெனக் கொண்டு கடவுள்நீ நின்னை நம்பி நிலத்திடை யென்றுமே மன்னு பாரத மாண்குலம் யாவிற்கும் உன்னுங் காலை உயர்துணை யாகவே சொன்ன சொல்லை உயிரிடைச் சூடுவாம் ஐய கேளினி யோர்சொல் அடியர்யாம் உய்ய நின்மொழி பற்றி யொழுகியே மைய ரும்புகழ் வாழ்க்கை பெற ற்கெனச் செய்யும் செய்கையின் நின்னருள் சேர்ப்பையால் (நின்மொழி - கீதை] என்ற பாடல்களில் இதனைக் கண்டு மகிழலாம். கண்ணனுக்குக் கோவிந்தன்' என்ற ஒரு திருநாமமும் உண்டல்லவா? கோவர்த்தனம் என்ற மலையைத் தூக்கிக் கல்மாரியைத் தடுத்துக் கோக்களை காத்தபோது இந்திரன் சூட்டிய பெயர் இது. எனவே, கோவிந்தன் பாட்டு" என்ற பாடலும் கண்ணனைப்பற் நியதாகவே கொள்ளல் ஏற்புடைத்து. இப்பாடலில் கோவிந்தனைச் சராசரத்து நாதா என்று விளிக்கின்றார். சர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்று மக்களிடையே வழங்கும் சொற்றொடர்தான் இங்ங்ணம் விளிக்கத் துரண்டுகின்றது என்று கருதலாம். கோவிந்தனிடம் வேண்டுவனவற்றைப் பாடலில் காண் போம். எளியனேன் 'யான்’ எனலை எப்போது போக்கிடுவாய்? இறைவனே.இவ் வளியிலே பறவையிலே மரத்தினிலே முகிலினிலேவரம்பில் வான 6. மேலது.-44