பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 கண்ணன் பாட்டுத்திறன் வெளியிலே, கடலிடையே மண்ணகத்தே வீதியிலே வீட்டி லெல்லாம் களியிலே, கோவிந்தா! நினைக்கண்டு நின்னொடுநான் கலப்ப தென்றோ? என்கண்ணை மறந்துனிரு கண்களையே என்னகத்தில் இசைத்துக் கொண்டு நின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே நான்கண்டு நிறைவு கொண்டு வன்கண்மை மறதியுடன் சோம்பர்முதல் பாவமெலாம் மடிந்து, நெஞ்சிற் புன்கண்போய் வாழந்திடவே, கோவிந்தா! எனக்குமுதம் புகட்டு வாயே. இங்கும் கண்ணனை விசுவருப தரிசனமாகவே, கண்டு களிப்பதைக் காணலாம். பாரதியின் பாஞ்சாலி சபதத்திலும் திருதராட்டிரன் வாய்மொழியாகக் கண்ணனைப்பற்றிக் கவிஞர் பேசுகின் றார். ஆதில் பரம்பொருள் நாரணன்-தெளி வாகிய பாற்கடல் மீதிலே-நல்ல சோதில் பனாமுடி யாயிரம்-கொண்ட தொல்லறி வென்னுமோர் பாம்பின்மேல் போதத் துயில்கொளும் நாயகன்-கலை -ஒ போந்து புவியிசைத் தோன்றினான் ஒதக் குவளை விழியினான்-என்று செப்புவர் உண்மை தெளிந்தவர்" உண்மை தெளிந்தவரில் நம் கவிஞர் என்பதற்கு என்ன தடை அடுத்து, 7. பாஞ்சாலி சபதம்-81.