பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனைப்பற்றிய தனிப்பாடல்கள் 爱憩 -ஒரு பேயினை வேதம் உணர்த்தல்போல்,-கண்ணன் பெற்றி உனக்கெவர் பேசுவார்? என்று கூறுவதும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. ஞானியர் உணர்ந்த உண்மையை ஒரு பேயினுக்கு எங்ங்ணம் உணர்த்தல் முடியும்? நக்தலாலா : கரிய நிறத்தையேனும் நீல நிறத்தை யேனும் காணும்போதெல்லாம் ஆழ்வார்கள் எம் பெருமான் கண்ணனைக் கண்டதாகவே மயங்குவர். அவ்வளவு அன்பு ஆழ்வார்கட்கு ஆத்திருமேனியில் நம்மாழ்வார் பேசுகின்றார் : பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலரென்றும் காண்டோறும்-பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான்உருவே என்று." (பூவை ஒருவகைப் பூ, காயா - ஒருவகைப் பூ நீலம் - செங்கழு நீர்ப் பூ மெல் ஆவி - மிருது வான உயிர்.) 'பூவைப் பூ, காயாம் பூ, நீலோற்கலம், கருநீர்ப் பூ என்னு மிவற்றை நான் காண்கின்ற பொழுதெல்லாம் எம் பெருமான் உருவைக் கண்டதாகவே நினைத்து ஆவியும் உடலும் பூசிக்கப் பெறுகின்றேன்” என்கின்றார் ஆழ்வார். இன்னொரு பாசுரத்தில் மேகம், மலை, கடல், செறிந்த இருள், பூவைப் பூ மற்றும் கருநெய்தல், குயில், மயில், கருவிளை, களங்கணி இவற்றைக் காணும்போதெல்லாம் 8. பெரி. திருவந் 73 9. மேலது 49. يهة باسم rrسه تقي