பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

沙夏醇 கண்ணன் பாட்டுத்திறன் கண்ணபிரானை நேரில் காண்ப்து போன்ற அ நுபவம் ஏற்படுவதாகக் கூறுகின்றார் ஆழ்வார். ஆண்டாளும், பைம்பொழில்வாழ் குயில்காள்! மயில்காள் ஒண் கருவிளைகாள்! வம்பக் களங்களிகாள்! வண்ணப்பூவை நறுமலர்காள்! ஐம்பெரும் பாதகர்காள்! அணிமாலிருஞ் சோலைநின்ற எம்பெருமா னுடையநிறம் உங்களுக்கு என்செய்வதே.10 (என் செய்வது ஏதுக்கு) குயில், மயில், கருவிளை, களங்கனி, காயாம்பூ என்னும் இவை ஐந்தையும் ஐம்பெரும் பாதகர்கள் என்று பழிக் கின்றாள். அவை எம்பெருமானுடைய நிறத்தைக் கொண்டு தன்னைத் தீங்கு செய்வதாகக் கருதுகின்றாள்; தனக்குத் தீங்கு விளைவிப்பதற்காக அவை எம்பெரு மானின் நிறத்தை ஏறிட்டுக் கொண்டன என்பது அவள் நினைப்பு. இவற்றை யெல்லாம் நினைந்து நந்தலாலா என்ற பாடலில் பாரதியார், காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தவாலா; பார்க்கு மரங்களெல்லாம் நந்தலாலா-நின்றன் பச்சைநிறம் தோன்றுதையே நந்தலாலா" 16. நாச், திரு. 9 : 4 11. வேதாந்தப் பாடல்கள்-11. நந்தலாலா,