பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனைப்பற்றிய தனிப்பாடல்கள் 3 # 1 என்று கூறுவதாகக் கருதலாம். நந்தகுமரனைக் கவிஞர் 'நந்தலாலா என்று விளிக்கின்றார், கவிஞர் இந்திப் பகுதி யான காசியில் வாழ்ந்ததால் இந்தி மொழியின் தாக்கம் கண்ணனுக்கு இத் திருநாமமிடச் செய்துவிட்டதுபோஇம்! அடுத்து, தான் கேட்கும் ஒலிகள் யாவும் கண்ணனின் புல்லாங்குழலின் இனிய ஓசையை நினைவூட்டுவதாகச் செப்புகின்றார். காசாங்குச நாயகியின்' நிலையைக் கூறும் திருத் தtrயார், அறியும் செந்தியைத் தழுவி அச்சுதன் என்னும்: (அறியும் சுடும் என்று அறியப்பட்ட) என்று பேசுகின்றாள். தன் மகள் செவ்விய தீயைக் காணும்போது அதனை அச்சுதனாகவே கருதி அதனைத் தழுவுவதாகக் கூறுகின்றாள். இங்ங்ணம் இத் திருவாய் மொழியில் தன் மகள் உறவு கொள்ளும் பல பொருள் களைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றாள். பாரதியாரும் இவ்வதுபவத்தைப் பெற்று, தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா-நின்னைத் தீண்டும்இன்பம் தோன்றுதடா நந்தலாலா என்று பேசுகின்றார். பெரியாழ்வார் பாசுரங்கள் மட்டுமே யன்றி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் யாவும் பாரதியின் பாடல்களில் நிழலிடுவதைக் காணமுடிகின்றது. 12. நம்மாழ்வாருக்குப் பராங்குசர்’ என்ற திருநாம முண்டு. நாயகி நிலையை ஏறிட்டுககொண்டு பேசும்போது பராங்குச நாயகி ஆகின்றார். 13. திருவாய், 4, 4 : 3