பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

琶蟹盛 கண்ணன் பாட்டுத்திறன் கண்ணன் திருவடி : எம்பெருமானின் திருவடி பெரு மையை முமுட்கப்படி இவ்வாறு பேசும் : ‘பிராட்டியும் அவனும் விடினும் திருவடிகள் விடாது, திண்கழலா யிருக்கும்' தன்னைப் பற்றினாரை, புருஷகாரப் பொருளான" பிராட்டியாரும் உபாயப் பொருளான எம்பெருமானும் கைவிடினும் பகவானுடைய திருவடிகள் என்றும் விடா; அவை மிக்க உறுதியுடையனவாகும். எம்பெருமானின் திருவடிகள் அவனை விடவும் புருஷகார பூதையான பிராட்டியாரைவிடவும் சிறந்தனவாகும். இதன் விளக்கம் ஈண்டுத் தேவைப்படுகின்றது, பிராட்டியார் சேததனுடைய துன்ப நிலையைக் கண்டு மனமிரங்கி அவனை ஏற்றுக்கொள்ளுமாறு புருஷ காரம் செய்கின்றார். இத்தகைய பண்புடைய அவர் இவனுடைய குற்றங்களை எடுத்துரைக்க மாட்டார் என்பது உண்மை ஆயினும், ஈசுவரன் மனத்தில் இவனை ஏற்றுக்கொள்ளும் எண்ணத்தை ஊன்றுவிப்பதற்காக ஒரு கால் சில குற்றங்களை உரைக்கக்கூடும்; இங்ஙனம் குற்றம் உரைக்கும் முறையில் பிராட்டியார் இவனைக் கைவிட்ட வராகின்றார். இந்தச் சேதநனிடம் ஊன்றிய அன்பு கொண்ட பகவான், தனக்குள்ள வாத்சல்யம் முதலிய குணங்களால், என் அடியார் அது செய்தார் செய்தாரேல் நன்று செய்தார்: 14. முமுட்கப்படி-146. 15. புருஷகாரம் தகவுரை; புருஷகார பூதைதகவுரை கூறுபவள் 16. பெரியா. திரு. 4, 9 : 2 (உரை கண்டு தெளிக).