பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனைப்பற்றிய தனிப்பாடல்கள் 麗靈露 என அவனை ஏற்றுக்கொள்ள முன் வந்து நிற்பன். இதி தகைய எம்பெருமானும் சில சமயம் கைவிடுவதுண்டு. இம் முறையில் சேதநனுக்கு நன்மை புரிபவராகிய இவ் விருவரும் கைவிடினும், தம் அழகினால் சேதநனை அப்புறம் செல்லாதவாறு அகப்படுத்திக் கொள்ளும் அவன் திருவடிகளோ, சேதநனை விடாது பற்றிக்கொள்ளும் திண்மை வாய்ந்தனவாக இருக்கும். இதனை மனத்திற் கொண்டே நம்மாழ்வார், வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே.ே என்று திருவாய் மலர்ந்தருளினார். சேஷ பூதனுடைய சொருகத்தை நோக்கினும் அவன் இறங்கும் துறை ப்கவா னுடைய திருவடிளே யாகும்.' பெரியார்கள் திருநாட்டுக்கெழுந்தருளும் இறுதிக் காலத்தில் தமக்கு மிகவும் வேண்டிய உள்ளன்பர்கட்கு அருமையான சில உபதேசங்களைச் சொல்லிப்போவ துண்டு. இதனைச் 'சரம் சந்தேசம்’ என்று வழங்குவர். எம்பெருமான் நம்மாழ்வாரைத் திருநாட்டிற்குக் கொண்டு போக விரைகின்றான்; ஆழ்வாரும் தமக்கு இனி அடைய வேண்டிய பொருள் தப்பாது என்று துணிவு கொள்ளு கின்றார். இவர் சம்சாரிகளாகின்ற நம் போலியர் பக்கல் பரம கருணை வடிவெடுத்தவராகையாலே, சரம் உபதேசம் செய்யத் தொடங்குகின்றார். கண்ணன் கழலிணை நண்ணும் மன முடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே' 17. திருவாய். 1, 2 : } {} 18. முமுட்சுப்படி-147, 19. திருவாய் 10, 5 : 1.