பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 கண்ணன் பாட்டுத்திறன் (நன்னும் அடைய வேண்டும்) என்று தம் உாதேசத்தைத் தொடங்குகுன்றார். எம் செருமான் கழலிணை என்று சொல்லவேண்டிய இடித்தில் "கண்ணன் கழவினை என்று சொல்லப்பட்டிருப்ாது சிந்திக்கத்தக்கது. அடியார்க்காகத் தூது சென்றும், தேரோட்டியும் ஆன்மகோடிகட்காகத் தன் செளலப்பியம் (எளியனாயிருக்கும் இருப்பு) என்னும் திருக்குணத்தைக் காட்டியும் பெருமை பெற்றவன் கண்ணன். ஆகவே, அவன் திருவடிகள் குறிப்பிடப்பெறலாயிற்று. நன்னும் மனமுடையீர்!’ என்ற விளியினால், எம்பெருமான் திருவடி களை அடையவேண்டும் என்ற ருசிக்கு மேற்பட்ட வேறோர் அதிகாரமில்லை என்ப்தும், அந்த ருசியுடையா ரெல்லாரும் அதிகாரிகளே என்பதும் தெளிவாகின்றன. பாரதியார் இக்கருத்துகளையெல்லாம் நன்கு அறிந்து தெளிந்தவர். வைணவ தத்துவம் இவர் அறியாததன்று: 2ாரதியார் பிறந்து வளர்ந்த எட்டயபுரமும், கல்விகற்ற நெல்லையம் பதியும் ஆழ்வார் திருவவதரித்த குருகூருக்கு எட்டாத ஊர்களன்று. இறைவா! இறைவா!' என்ற இசைப்பாடலொன்றே இவர் வைணவ தத்துவத்தை நன்கு அறிந்தவர் என்பதற்கு அரணாக அமைகின்றது. எத்தனைகோடி இன்பம் வைத்தாய்-எங்கள் இறைவா! இறைவா! இறைவா! என்ப்து இசைப்பாடலின் பல்லவி. இங்குக் கடவுளைப் பொதுவாக இறைவா! என்றுதான் விளிக்கின்றார்கசேந்திரன் ஆதிமூலமே!’ என்று பொதுவாய் விவித்தது போல. _ক্লক ড়ের பா-36 இறைவனை வேண்டுதல்,