பக்கம்:கண்ணன் பாட்டுத் திறன்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

韶盟领 கண்ணன் பாட்டுத்திறன் முக்தியென்று ஒருநிலை சமைத்தாய்-அங்கு முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய் பக்தியென்று ஒருநிலை வகுத்தாய்-எங்கள் பரமா! பரமா! பரமா! என்ற சரணத்தில் பரமப்த நாதனைக் குறிப்பிடுவதுடன் முக்தி என்ற வீடுபேற்றையும், அதனையடையும் வழி யாகிய பக்தியையும் குறிப்பிடுகின்றார். இவற்றையெல்லாம் அறிந்து தெளிந்த பாரதியார், கண்ணன் திருவடி எண்ணுக மனமே திண்ணம் அழியா வண்ணம் தருமே." என்ற கண்ணனின் திருவடிச் சிறப்பைப் பாடத்தொடங்கு கின்றார். இத் தலைப்பிலுள்ள எட்டுப் பாடல்களும் மேற் குறிப்பிட்ட திருவாய்மொழிப் பாசுரங்கள்போல் அமைந் திருத்தலை ஒப்புநோக்கிக் கண்டு மகிழலாம். முதல் திருவாய்மொழிப் பாசுரமும் பாரதியாரின் பாடலும் அடியொற்றி அமைந்துள்ளன. ஏனையவை அமையா விடினும் அவற்றில் கருத்தொற்றுமை நிழலிடுவதைக் காணலாம். 21. வேதாந்தப்பாடல்கள்-22 மனமே. சில பதிப்பு களில் இப்பாடல் கண்ணன் திருவடி என்ற தலைப்பில் "தோத்திரப்பாடல்கள் என்ற தலைப்பின் கீழ்க் காணப்படு கிறது. -